×

செல்போன் கதிர்வீச்சை தடுக்கும் எனக்கூறி மாட்டுச் சாணத்தால் உருவாக்கப்பட்ட 'சிப்'ஒன்றை வெளியிட்டுள்ளது ராஷ்டிரிய காமதேனு ஆயோக்

டெல்லி: மாட்டு சாணம், கதிர்வீச்சு தடுப்பாற்றல் கொண்டது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கின் தலைவரின் வல்லபாய் கதிரியா தெரிவித்துள்ளார். பால் பொருட்களைத் தவிர்த்து பசு மாட்டுச் சாணம் மற்றும் பசு மாட்டு சிறுநீர் போன்றவற்றையும் சந்தைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக், பசுக்களை பேணுதல், பாதுகாப்பு மற்றும் மேம்பாடுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இதன் தலைவராக வல்லாப் கத்திரியா உள்ளார். 2019ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆயோக், பண்டிகைகளின் போது மாட்டு சாணம் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் நாடு தழுவிய பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வல்லபாய் கத்திரியா மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட சிப்  ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த சிப் செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சை குறைக்கும் என்றும் நோய்களை  எதிர்கொள்ளும் திறன் வாய்ந்தது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும்  வல்லபாய் கத்திரியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கதிர்வீச்சினால் ஏற்படும் ஆபத்தில் இருந்து ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் இந்த சிப்பை பயன்படுத்துங்கள் என்று கத்திரியா கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சிப்பை குஜராத்தில் இருக்கும் ஒரு பசு மாட்டுப் பண்ணை உருவாக்கியுள்ளது. மாட்டுச் சாணம் ஒவ்வொருவரையும் காப்பாற்றும். வீட்டில் இந்த மாட்டுச் சாணத்தை வைத்தால், கதிர்வீச்சில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மனிதரை தாக்காமல் இந்த மாட்டுச் சாணத்தால் செய்யப்பட்ட சிப் பாதுகாக்கும்.

இந்த சிப்பை செல்போன்களில் பயன்படுத்தலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். மாட்டுச் சாணத்தால் ஆன இந்த சிப்புக்கு கவ்சத்வ கவாச் என்று பெயரிடப்பட்டுள்ளது என கூறினார்.


Tags : Rashtriya Kamadenu Ayog , Rashtriya Kamadenu Ayog has released a 'chip' made of cow dung to block cell phone radiation.
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...