×

மலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறைகளை தொடர்வது பற்றி மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவு..!!

சென்னை: தமிழகத்தில் மலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறைகளை தொடர்வது பற்றி மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பரவலை கட்டுபடுத்தும் நோக்கில் இம்மாத இறுதி  வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக  மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் தேவை என்ற நடைமுறை தளர்த்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி நீலகிரிக்கு  சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்கும் வகையில் வெளியூர்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பாஸ்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,   தமிழகத்தில் மலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை  உயர் நீதிமன்றம் இ-பாஸ் நடைமுறைகளை தொடர்வது பற்றி மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், 3 நாட்களுக்கு மத்திய அரசிடம் விளக்கம் பெற்று விரிவாக விளம்பரப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

Tags : Central Government ,Tamil Nadu ,hills , E-Pass, Government of Tamil Nadu, High Court, Order
× RELATED தமிழக அரசுக்கும், தமிழக...