அமைச்சர் தொகுதியில் நாற்றுநட தயாராக இருக்கும் சாலை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கீழமாத்தூர் ஊராட்சியில் அஷ்டலட்சுமி நகர் உள்ளது. விரிவாக்க பகுதியான இங்கு 20க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்றுவர முறையான சாலை வசதி இல்லை என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இப்பகுதி மக்கள் கூறுகையில், 100க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதியில் சாலை அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.

அதேநேரத்தில் இதற்கு அருகில் உள்ள தனியார் தண்ணீர் நிறுவனம் செல்வதற்கு ஆளும் கட்சியினர் உதவியோடு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தார் சாலை அமைத்து கொடுத்துள்ளது. பொதுமக்கள் சென்று வர தேவையான சாலையை அமைத்து தர எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தற்போது மழைகாலம் துவங்கி விட்டதால், இந்த சாலை சேறும் சக்தியுமாக நாற்றுநட தயாராக உள்ள வயல் போல உள்ளது. இதனால் இப்பகுதியில் நடந்து செல்லும் முதியவர்கள் பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.

இந்த பகுதி அமைச்சர் செல்லூர் ராஜுவின் தொகுதிக்கு உட்பட்ட பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரின் தொகுதியில் தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Related Stories:

>