×

அருப்புக்கோட்டையில் இடிந்து விழும் அபாயத்தில் ரேஷன்கடை கட்டிடம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டி தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இரண்டு ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 1,2, ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆயிரத்தி நூறு ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் இக்கடையின் மேல்தள பால்கனி கடந்த பல மாதங்களுக்குமுன்பு விரிசல் ஏற்பட்டிருந்தது. பராமரிப்பு செய்யாததால் தற்போது பெய்தமழையில் முற்றிலும் சேதமடைந்து அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. உடைந்த அந்த பால்கனி பகுதியை கட்டிடத்தின் கீழ் உள்ள மேற்கூரை தாங்கி நிற்கிறது. இக்கூரை சிமெண்ட் பலகை மூலம் வேயப்பட்டிருப்பதால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உளள்து.

இதனால் பொருட்களை வாங்க வரிசையில் நிற்கும் பொதுமக்கள் மீதோ அல்லது கடை ஊழியர்கள் மீதோ விழுந்து உயிர்சேதம் ஏற்படக்கூடிய நிலையில் இருந்தது. இதனால் ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே கட்டிடம் இடிந்து விழும் முன்கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். மேலும் தற்காலிகமாக அருகில் உள்ளதொடக்க வேளாண்மை வங்கிக்கு சொந்தமான கட்டிடத்தில் ரேஷன் கடைசெயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ration shop building ,Aruppukottai , Aruppukottai, ration shop
× RELATED மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா அருப்புக்கோட்டையில் இன்று அன்னதானம்