திண்டுக்கல்- மதுரை 4 வழிச்சாலையில் தடுப்புச்சுவர் இல்லாத தரைப்பாலம்

சின்னாளபட்டி: திண்டுக்கல்ல்- மதுரை நான்கு வழிச்சாலையில் கலிக்கம்பட்டி பிரிவு அருகே சிறுமலையிலிருந்து மழை தண்ணீர் வரும் வாய்க்காலுக்காக தரைப்பாலம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மும்முனை சந்திப்பு அருகேயுள்ள இந்த தரைப்பாலத்திற்கு பக்கவாட்டு சுவரோ அல்லது ஒளிரும் ஸ்டிக்கருடன் கூடிய தடுப்பு கட்டைகளோ அமைத்து கொடுக்கவில்லை. இதனால் இரவுநேரங்களில் பாலத்தின் அருகே திரும்பும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக டூவீலர்களில் வருவோர் அதிகளவு விபத்தில் சிக்கி வருகின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறையிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைத்து கொடுக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>