×

குமரி முழுவதும் சாரல் மழை நீடிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நேற்று விடிய விடிய சாரல் மழை பெய்தது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை காணப்பட்டது. நேற்று பகல் வேளையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட விட்டுவிட்டு மழை பெய்தவண்ணம் இருந்தது.  மேலும் அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 38.85 அடியாகும். அணைக்கு 263 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது.

பெருஞ்சாணி நீர்மட்டம் 69.10 அடியாகும். அணைக்கு 494 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 13.42 அடியாகவும், சிற்றார்-2ல் 13.51 அடியாகவும், பொய்கையில் 8.90 அடியாகவும், மாம்பழத்துறையாறில் 54.12 அடியாகவும் நீர்மட்டம் காணப்பட்டது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 20.6 அடியாகும். மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக பாலமோரில் 8.6 மி.மீ மழை பெய்திருந்தது. பெருஞ்சாணி 4.4, புத்தன் அணை 3.8, சுருளோடு 5.2, அடையாமடை 6, முள்ளங்கினாவிளை 5, முக்கடல் அணை 4 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.

Tags : Kumari , Kumari, rain
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...