×

கொரோனாவில் இருந்து மீண்டு விட்டேன். நான் சக்திவாய்ந்தவனாக உணருகிறேன்; அனைவரையும் முத்தமிட விரும்புகிறேன்: அதிபர் ட்ரம்ப் பேச்சு

வாஷிங்டன் : கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்து விட்டதால் இனி எவரையும் முத்தமிடலாம் என்று பொதுவெளியில் பேசி புதிய சர்ச்சைக்கு வித்திட்டு இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக பம்பரமாய் சுழன்று பரப்புரை செய்து வந்த ட்ரம்பின் வேகத்தை, அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று தடுத்து நிறுத்தியிருந்தது. 2 வாரங்கள் வெள்ளை மாளிகையில் ஓய்வில் இருந்து வந்த டிரம்ப், தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் ஃபுளோரிடாவில் இருந்து தொடங்கி இருக்கிறார். மேடையில் ஆதரவாளர்கள் இடையே பேசிய ட்ரம்ப், கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்து விட்டதால் இனி ஆண்களையும் பெண்களையும் தாம் முத்தமிடலாம் என்று கூறி கூட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.

அதிபர் ட்ரம்ப் பேசுகையில், எனது சொந்த மாநிலமான புளோரிடாவில் நான் மீண்டும் பிரச்சாரத்திற்கு திரும்பி வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் உங்கள் பிரார்த்தனைகளால் மிகவும் உற்சாகமடைந்துள்ளேன். உங்கள் ஆதரவுக்கு நான் தலை வணக்குகிறேன்.கிருமித் தொற்றை கடந்துவிட்டேன்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விட்டது. இப்பொது மிகவும் சக்தி வாயந்தவனாக உணர்கிறேன். நான் அங்கு வந்து அனைவரையும் முத்தமிடுவேன்.ஆண்களையும் அழகான பெண்களையும் முத்தமிடுவேன், என்றார். இதனிடையே புளோரிடாவில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது மாஸ்க் அணியாமல் பேசினார் ட்ரம்ப். அவரது பேச்சை கேட்க வந்த பலரும் மாஸ்க் அணியவில்லை, தனி மனித இடைவெளியும் கடைபிடிக்கவில்லை. ட்ரம்ப் ஆதரவாளர்கள் பலரும் தோளோடு தோளோடு உரசியபடி நின்று கொண்டிருந்தனர்.

Tags : Trump , Corona, want to kiss, President Trump, talk
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...