×

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு: பல்வேறு மாநிலங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!!

சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு ஆந்திர கடற்பகுதியில் கரையை கடந்த நிலையில், கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு இன்று காலை வடக்கு ஆந்திர பிரதேச கடற்கரை ஒட்டி காகிநாடாவில் கரையை கடந்தது. நேற்றைய நிலையில் தெரிவித்ததாவது: அந்தமான் மற்றும் அதனை ஒட்டி உள்ள கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரா நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் லோசான மழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், தெலுங்கானாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கர்நாடகாவின் உட்புற பகுதிகள், தெற்கு கோங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரா, மராதாவாடா, மிகமிக  கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், வடக்கு ஆந்திர பிரதேசம், ராயல்சீமா, கர்நாடகாவின் தெற்கு உட்புற பகுதி, தெற்கு ஒடிசா, தெற்கு சத்தீஸ்கர், விதர்பா பகுதிகள் தனித்து விடப்படும் அளவிற்கு மிகமிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : states ,Indian Meteorological Department , Depression, heavy rain, Indian Meteorological Department, warning
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து