×

தீ விபத்தில் 2 குடிசைகள் நாசம்

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் தாலுகா நடுவீரப்பட்டு கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (50), கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, இரண்டு மகன், மகள் உள்ளனர். நேற்று அதிகாலை குடிசை வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் சக்திவேல் வீட்டில் திடீரென கூரையில் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனைகண்ட சக்திவேல் மற்றும் உறவினர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் குடிசை வீடு முழுவதும்  எரிந்து நாசமானது. அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் வீடும் எரிந்து நாசமானது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். சோமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை வருகின்றனர்.

Tags : 2 huts destroyed in fire
× RELATED அரசு துறையினர் மெத்தனம் உடைந்த மடைகளை...