×

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

திருப்போரூர்:  காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் செ.எல்லப்பன் தலைமையில் திருப்போருரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் (எ) இதயவர்மன், மாநில தகவல் தொழில்நுட்ப துணைச் செயலாளர் அ.தமிழ்மாறன், மாவட்ட கழக துணை செயலாளர் ஜி.சி.அன்புசெழியன், திருப்போரூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.எம்.சேகர், திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.து.மூர்த்தி, திருப்போரூர் பேரூர் கழக செயலாளர் எம்.தேவராஜ், திருக்கழுக்குன்றம் பேரூர் கழக செயலாளர் திரு.து.யுவராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வீ.விஜயகுமார், காஞ்சி வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் பம்மல் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.  ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், ஊராட்சி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இக்கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு  சால்வை அணிவித்து, தகவல் தொழில் நுட்ப அணியின் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Tags : Kanchipuram North District ,DMK ,Information Technology Team Administrators Consultative Meeting , Kanchipuram North District DMK IT Team Administrators Consultative Meeting
× RELATED காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள...