×

மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்போரூர்:  மத்திய அரசின் விவசாயிகள் திருத்தச் சட்டம், தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு காஞ்சிபுரம் ,  செங்கல்பட்டு மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைச் செயலாளர் எல்லப்பன் தொடங்கி வைத்தார். திருப்போரூர் ரவுண்டானா அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேருந்து நிலையம் அருகே மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து ஓ.எம்.ஆர். சாலையில் மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை திருப்போரூர் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காஞ்சிபுரம் தேரடியில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட செயலாளர் மேகநாதன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் தொகுதி செயலாளர் கமலநாதன், உத்திரமேரூர் தொகுதி செயலாலர் தங்கராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், மூர்த்தி, சுந்தரமூர்த்தி, ஸ்டாலின், ராசகோபால், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கல்விக்கொள்கை திரும்பப் பெற வேண்டும், மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும், கிராமப்புற வேலை உரிமை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  மறியல் போராட்டத்திற்காக தேரடியில் இருந்த ஊர்வலமாகப் புறப்பட்டவர்களை ஆடிசன்பேட்டை அருகில் போலீசார் தடுத்து கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் எல்லப்பன், சுப்ரமணியன், ஒய்.எம்.நாராயணசாமி, ராமதாஸ் உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Parties ,Central Government , Indian Comm. Against the anti-people laws of the Central Government. Parties protest
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...