×

ரயில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு; பொதுமக்கள் கடும் தவிப்பு மும்பையில் வரலாறு காணாத மின்தடை

மும்பை: மும்பையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று பல மணி நேர மின்தடை ஏற்பட்டது. இதனால் சாலைகளில் 700க்கும் மேற்பட்ட சிக்னல்கள் இயங்கவில்லை. ரயில் போக்குவரத்தும் முற்றிலும் ஸ்தம்பித்தது. நேற்று காலை 10.05 மணி அளவில் மும்பை நகரில் மின் தடை ஏற்பட்டது. தானே, டோம்பிவலி, பன்வெல், கல்யாண் போன்ற இடங்களிலும் மின்தடையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மும்பை நகருக்கு அதானி எல்க்டிரிசிட்டி, டாடா பவர் சப்ளை, மும்பை மாநகராட்சியின் பெஸ்ட் நிறுவனம் ஆகியவை மின்சாரம் சப்ளை செய்கின்றன.

டாடா பவர் சப்ளை நிறுவனத்திலும் கோளாறு ஏற்பட்டதாகவும் மின்தடைக்கு இது முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. இது பற்றி விசாரணை நடத்த முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மின் தடை காரணமாக, மும்பை போக்குவரத்துக்கு உயிர்நாடியாகத் திகழும் ரயில்கள் எதும் இயங்கவில்லை. வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகளில் சிக்கனல்களும், கண்காணிப்பு கேமிராக்களும் இயங்கவில்லை. நகரில் பலர் லிப்ட்டுகளில் சிக்கிக்கொண்டனர். கொரோனா காரணமாக பலர் வீடுகளில் இருந்தே வேலை பார்க்கிறார்கள்.

குறிப்பாக நிதி நிறுவனங்கள், வங்கிகள், தகவல் தொழிநுட்ப நிறுவனங்களில் வேலை பார்பவர்கள் வீடுகளிலில் இருந்தப்படியே வேலை பார்த்துவந்தனர். மின் தடை காரணமாக அவர்கள் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கொரோனா காரணமாக மாணவர்கள் வீடுகளில் இருந்து கல்வி கற்று வருகின்றனர். மின் தடை காரணமாக அவர்களின் படிப்பும் பாதிப்படைந்தது. 4 மணி நேரத்திற்கும் மேலாகியும், மின்சாரம் வராததால், பலர் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளம் வழியாக நடந்து சென்றனர். எதிர்பாராத விதமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பெரும்பாலான மருத்துவமனைகளில், டாக்டர்கள், செவிலியர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் அவதிக்குள்ளாகினர்.

கொரோனா சிகிச்சை மையங்களில் பல வெண்டிலேட்டர்கள் மின்சாரம் இன்றி இயங்காததால், நோயாளிகள் அவதிக்கு ஆளாகினர். மதியம் 12 மணிக்கு மேல் படிப்படியாக மின்சப்ளை வர துவங்கியது. இருப்பினும் மாலை வரை மின்தடை பிரச்னை நீடித்தது. ஒட்டு மொத்தத்தில் ஒரு நாள் மின்தடை மும்பையை புரட்டிப்போட்டு விட்டது. ட்விட்டரில் டிரெண்டிங்: மும்பையில் ஏற்பட்ட வரலாறு காணாத மின்தடை, ட்விட்டரில் டிரண்டிங் ஆனது. பலர், மின்தடையால் தாங்கள் படும் அவதியை வெளிப்படுத்தும் விதத்தில் படங்களை வெளியிட்டிருந்தனர். சமூக வலைதளங்கள் அனைத்திலும், இதுவே பிரதான பேசுபொருளாக இருந்தது.

Tags : Mumbai , Train traffic jam; Unprecedented blackout in Mumbai
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...