×

எஸ்.ஐ. பணி முதற்கட்ட உடற்தகுதி தேர்வு முடிந்தது மைதானத்தில் ஓடும்போது காவலர் கால் முறிந்தது

சென்னை: உதவி ஆய்வாளர் உடல் தகுதி தேர்வின் போது ஓட்டப்பந்தயத்தில் ஓடிய ராஜ்குமார் என்ற காவலரின் கால் எலும்பு முறிந்தது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஜனவரி மாதம் 12,13 ஆகிய தேதிகளில் 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வை ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் எழுதினர். அதில் 1,500  பெண்கள் உட்பட 5,500 பேர் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றனர். அதைதொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கான முதற்கட்ட உடற்தகுதி தேர்வு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் கடந்த 1ம்தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.
இந்த உடற்தகுதி தேர்வுக்கு நாள் ஒன்றுக்கு 600 பேர் வீதம் அழைக்கப்பட்டனர். மேலும் கொரோனா நெகட்டிவ் சான்று கொண்டு வராதவர்கள் மற்றும் 15 முதல் 20 வயதுள்ள பெண்கள் திருப்பி அனுப்பட்டனர்.

அந்த வகையில் முதற்கட்ட உடல் தகுதி தேர்வில் 5,500 பேரில் 5400 பேர் கலந்து கொண்டனர். 100 பேர் கலந்து கொள்ள வில்லை. கர்ப்பிணிகளுக்கு மட்டும் வேறு ஒரு நாளில் உடல் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. கடைசி நாளான நேற்று 20 சதவீதம் காவல் துறை ஒதுக்கீட்டில் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சென்னை ஆயுதப்படை காவலர் ராஜ்குமார்(30) என்பவர் கலந்து கொண்டார். மைதானத்தில் 1,500 மீட்டர் ஓட்டம் பந்தயம் ஓடும் எல்லைக்கோடு நெருங்கும் போது திடீரென அவரது இடது முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதைதொடர்ந்து அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டாம் கட்ட உடல் தகுதி தேர்வு இன்று முதல் வரும் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.


Tags : guard ,field ,fitness test , S.I. The guard's leg was broken while running on the field after completing the preliminary fitness test
× RELATED கார் ஓட்டுநர் பலியான விவகாரத்தில்...