×

காதலி கழுத்தை அறுத்து விட்டு சென்னை வாலிபர் தற்கொலை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் கோவிந்தன்(48). இவர் குடும்பத் துடன் வேலை தேடி சென்னை, சேலையூர் வந்து தங்கினார். அங்குள்ள அரசுபள்ளியில் மூத்த மகள் 10ம் வகுப்பு படித்துவருகிறார். மாணவியும் அருகில் வசிக்கும் சதீஷூம் (20) காதலித்துள்ளனர். கொரோனா காரணமாக குடும்பத்தினருடன் தொட்டியம் சென்றார். சதீஷூக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. காதல் விவகாரம் தெரியவே திருமணத்தை நிறுத்திவிட்டனர். இதனால் விரக்தியடைந்த சதீஷ் கடந்த 11ம் தேதி தொட்டியம் சென்று மாணவியை தனியாக சந்தித்து கத்தியால் கழுத்தை அறுத்து தப்பினார். பின்னர் போலீசுக்கு பயந்து, மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Tags : teenager ,Chennai ,suicide , Chennai teenager commits suicide by cutting off girlfriend's neck
× RELATED மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி