×

காஷ்மீரில் முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் பழைய பார்சூல்லா பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஒருவன் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய தீவிரவாதி சைபுல்லா என்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையவன் சைபுல்லா. மேலும், பல ஆண்டுக்குப் பிறகு ஸ்ரீநகரில் பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kashmir , Major militant shot dead in Kashmir
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...