×

தனியார் நிலத்தில் அடியாட்களுடன் நுழைந்து மூதாட்டிக்கு கொலை மிரட்டல் அதிமுக பிரமுகர் அதிரடி கைது: பள்ளிக்கரணையில் பரபரப்பு

வேளச்சேரி: மடிப்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் மீனா ஞானசுந்தரம் (73). இவருக்கு சொந்தமான 24 சென்ட் நிலம் கோவிலம்பாக்கம் 200 அடி சாலையில் உள்ளது. இந்த இடத்தை பார்த்துக்கொள்ள காவலாளி ஒருவரை நியமித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன், இவரது நிலத்தில் அத்துமீறி நுழைந்த கோவிலம்பாக்கத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் கன்னியப்பன், பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுத்துள்ளார். இதுகுறித்து மீனா ஞானசுந்தரம் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிமுக பிரமுகர் கன்னியப்பன் தனது சகோதரர் கண்ணன் மற்றும் அடியாட்களுடன் மீனா ஞானசுந்தரத்திற்கு சென்று, அங்கிருந்த காவலாளியை தாக்கியதுடன், அங்கிருந்த சிசிடிவி கேமராவை உடைத்துள்ளார்.

மேலும், அவர் தங்கியிருந்த அறை சாவியை பிடுங்கி வைத்துக்கொண்டு, ‘‘ஒழுங்காக இந்த இடத்தை விட்டு ஓடிவிடு. இல்லையென்றால் உன்னையும், உன் முதலாளி மீனா ஞானசுந்தரம், அவரது மகன் பாலாஜி ஆகியோரை கொன்று விடுவேன்.’’ என மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி காவலாளி, நில உரிமையாளரான மீனா ஞானசுந்தரத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் அதிமுக பிரமுகர் கன்னியப்பன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

* நெஞ்சுவலி நாடகம்?
அதிமுக பிரமுகர் கன்னியப்பனை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றபோது, தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி அவர் மயங்கினார். இதனால் அவரை ஜாமீனில் விடுவித்தனர். இதையடுத்து, அவர் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : AIADMK ,land ,slaves , AIADMK leader arrested for threatening to kill grandmother by trespassing on private land
× RELATED அதிமுக பிரமுகரின் தலையீடு? போலீஸ்...