×

கார் மீது பைக் மோதி எம்எல்ஏ மருமகன் பலி

பூந்தமல்லி: ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம். திமுகவை சேர்ந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இவரது மருமகன் துளசிராமன்(50). கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மகளை பார்த்து விட்டு துளசிராமன் பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது சாலையோரம் நின்றிருந்த காரின் கதவு திடீரென திறக்கப்பட்டதால் துளசிராமன் காரில் மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சாலையில் அடிபட்டு கிடந்ததாக கூறி அனுமதித்து விட்டு காரில் வந்த நபர்கள் தப்பி சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : nephew ,MLA , MLA nephew killed in bike collision with car
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...