×

மனிதவாழ்வு சிறக்க இயற்கை காப்போம்: இன்று சர்வதேச இயற்கை பேரிடர் குறைப்பு தினம்

ஒருவன் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், அவன் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தினால் நிலைகுலைந்து போவான். அதுபோலத்தான் பரந்து விரிந்த பரப்பளவு கொண்ட இந்த உலகமும். இயற்கை பேரிடரை எதிர்கொள்ளும்போது, அது தரும் அழிவுகளில் இருந்து அவ்வளவு எளிதாக தப்பி விட முடியாது. ஆனால், மனித இனத்தால் ஏற்படும் பேரிடரை சமாளிக்கும் வழிகளை செய்யலாம். அதைத்தான் இயற்கை பேரிடர் குறைப்பு தினமென ஒவ்வொரு ஆண்டும் அக். 13ம் தேதி கடைப்பிடித்து வருகிறோம்.

கடந்த 2013ம் ஆண்டு, தமிழகத்தில் இயற்கை பேரிடர் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக, இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளர் ஒரு அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் ‘மோசம்’ என குறிப்பிடப்பட்டிருந்து அதிர்ச்சி அளிக்கிறது. அதிலும், சில கடலோர மாவட்டங்களில், அவசர கால நடவடிக்கை மையம் தயாராக இல்லை என தெரிவித்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆண்டுதோறும் ஒரிசா, மேற்கு வங்கம், மும்பை, கேரளா, தமிழகம் என பேரிடர் தாக்கும் மாநிலங்களை கொண்டுள்ளது இந்தியா.

ஆனால், மற்ற மாநிலங்கள் இவற்றை எளிதில் சமாளித்து விடுகின்றன. கடந்தாண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இருந்து, அம்மாநிலம் விரைவில் மீண்டு விட்டது. ஆனால், இதுபோன்ற நேரங்களில், பெரும் சேதத்தை குறைக்கும் வகையிலான தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம். மறுபுறம் கடல் வளத்தையும் பாதுகாக்க தவறுகிறோம். பவளப்பாறைகள் அழிப்பு, பாலித்தீன் பயன்பாடு, இரட்டை மடி மீன் பிடித்தல் என கடல் வளத்தையும் மெல்ல அழித்து வருகிறோம். இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மை பாதுகாக்கும். எனவே, மரம் வளர்ப்போம். மழை நீர் சேகரிப்போம். நீர்நிலைகளை பாதுகாப்போம்.

Tags : Let's save nature for the betterment of human life: Today is International Natural Disaster Reduction Day
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...