×

8 சார்பதிவாளர்கள் திடீர் பணியிடமாற்றம்: ஐஜி நடவடிக்கை

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 8 சார்பதிவாளர்களை பணியிடமாற்றம் செய்து ஐஜி ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 8 சார்பதிவாளர்கள் நேற்று திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, தலைவாசல் சார்பதிவாளர் (சேலம் கிழக்கு) ஆறுமுகம் ஆத்தூர் சார்பதிவாளராகவும், காரியாபட்டி சார்பதிவாளர் பாலமுருகன் அய்யம்பாளையம் சார்பதிவாளராகவும், தர்மபுரி 1ம் எண் இணை சார்பதிவாளர் மாரியப்பன் தர்மபுரி 2ம் எண் இணை சார்பதிவாளராகவும், பென்னாகரம் சார்பதிவாளர் லட்சுமி காந்தன் தர்மபுரி மேற்கு சார்பதிவாளராகவும், நாமக்கல் சார்பதிவாளர் (நிர்வாகம்) லலிதா சேலம் மேற்கு சார்பதிவாளராகவும் (நிர்வாகம்), கடையநல்லூர் சார்பதிவாளர் கஸ்தூரி ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவாளராகவும், கொம்மடிக்கோட்டை சார்பதிவாளர் ஜெசிந்தா மேட்டுப்பாளையம் சார்பதிவாளராகவும், கிருஷ்ணகிரி மாவட்ட சார்பதிவாளர் (சீட்டு மற்றும் சங்கம்) ரமேஷ்குமார் நாட்றாம்பள்ளி சார்பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : transfer ,dependents ,IG , 8 Sudden transfer of dependents: IG action
× RELATED சென்னை முழுவதும் 72 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்: போலீஸ் கமிஷனர் உத்தரவு