×

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு வைகோ கடிதம்

சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் ஆயாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முல்லைராஜ் என்ற இளைஞர், இந்தியப் படையில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவில், காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா என்ற இடத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பணியில் இருக்கும்போது இறந்துவிட்டதாக, அவருடன் வேலை செய்கிற ஒருவர், இரண்டு நாட்களுக்கு முன்பு, அலைபேசியில் தகவல் கூறி இருக்கிறார். அதன்பிறகு, அந்த அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்திய படையில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள். அவரது தாயார் அழகாத்தாள், இதுகுறித்து எனக்கு எழுதி இருக்கிற கோரிக்கை விண்ணப்பத்தை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். முல்லைராஜ் இருப்பு உடல்நிலை குறித்து விசாரித்து, உரிய தகவல் கிடைக்க உதவிட வேண்டும்.

Tags : Rajnath Singh ,Vaiko , Vaiko's letter to Defense Minister Rajnath Singh
× RELATED அமைதி ஏற்படுவதற்கு ஆசை மட்டும் போதாது;...