பாஜவில் நடிகைகள் பட்டாளம்

சென்னை: தமிழக பாஜவில் நடிகர்கள் ராதாரவி, எஸ்.வி.சேகர், நடிகைகள் நமீதா, காயத்ரி ரகுராம், குட்டி பத்மினி, ஜெயலட்சுமி, மதுவந்தி என்று பட்டாளமே உள்ளது. இதில் சிலருக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் கட்சியில் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் தேர்தல் மற்றும் பொதுக்கூட்டங்களில் பேசுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது குஷ்பு பாஜவில் இணைந்துள்ளார். அவருக்கு கட்சியில் முக்கியமான பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. அவரை வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தீவிர பிரசாரத்துக்கு பயன்படுத்த பாஜ திட்டமிட்டுள்ளது. குஷ்பு எல்லாருக்கும் நன்கு தெரிந்தவர், அது மட்டுமல்லாமல் சிறப்பாக பேசக்கூடியவர் என்பதால் அவர் மக்களை எளிதில் கவர்ந்து விடுவார் என்பதற்காக அவரை கட்சியில் சேர்த்ததாக கூறப்படுகிறது.

Related Stories:

>