×

மேல்மலையனூரில் முட்புதரின் நடுவே மின் கம்பம்: கண்டுகொள்ளாத மின்சார வாரியம்

மேல்மலையனூர்: மேல்மலையனூரில் மின்கம்பம் மற்றும் மின்சாரம் செல்லும் மின்கம்பிகள் முட்புதர்களிடையே செல்வதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதுடன் மின் கம்பிகள் அறுந்து விழும் நிலை உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அவலூர்பேட்ைட செல்லும் சாலையில் உள்ள மின் கம்பத்தை சுற்றிலும் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும் மின்கம்பிகள் அறுந்து விழவும், தீப்பொறி ஏற்படவும் அதிகளவு வாய்ப்புள்ளது. இருப்பினும் தாயனூர் மின்சார வாரிய அலுவலர்கள் இந்த மின் கம்பத்தை சரி செய்யாமல் அலட்சியமாக உள்ளனர்.  

எனவே மின் வாரிய அதிகாரிகள் இந்த மின் வழித்தடத்தில் உள்ள முட்புதர்களை அகற்றி மின்சாரம் தடையின்றி கிடைக்கப் பெறவும் விபத்தை தவிர்க்கவும் வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.Tags : bush ,Melmalayanur , Electric pole in the middle of a bush in Melmalayanur: Invisible electricity board
× RELATED கம்பம் அருகே பரபரப்பு ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி