×

பெங்களூரு கொல்கத்தா மோதல்: சார்ஜாவில் இன்று வாணவேடிக்கை

சார்ஜா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 28வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தலா 6 போட்டிகளில் ஆடி 4 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளன. கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பார்முக்கு திரும்பி உள்ளார். சுப்மான்கில், மோர்கன், ராகுல்திரிபாதி வலு சேர்க்கின்றனர். சுழல்பந்து வீச்சாளர்கள் நரேன், வருண்சக்ரவர்த்தி கச்சிதமாக செயல்பட்டு வருகின்றனர். மறுபுறம் பெங்களூரு கேப்டன் கோஹ்லி, சென்னைக்கு எதிரான கடைசி போட்டியில் அதிரடியில் மிரட்டினார்.

தேவ்தத் படிக்கல், டிவில்லியர்ஸ் வலு சேர்க்கின்றனர். ஆரோன் பிஞ்ச் தடுமாறி வருகிறார். வாஷிங்டன் சுந்தர் பவர்பிளேவில் கூட சிக்கனமாக பந்துவீசி அசத்துகிறார். வேகத்தில், சைனி, மோரீஸ் எதிரணிக்கு நெருக்கடி அளித்து வருகின்றனர். இரு அணிகளும் 24 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் கொல்கத்தா 14, பெங்களூரு 10ல் வென்றுள்ளன. கடைசியாக மோதிய 5 ஆட்டத்தில் கொல்கத்தா தான் 4ல் வென்றுள்ளது. சார்ஜா குட்டி மைதானம் என்பதால் இன்று வாணவேடிக்கை காத்திருக்கிறது.

Tags : Bangalore ,clash ,Kolkata ,Sharjah , Bangalore-Kolkata clash: Fireworks in Sharjah today
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து; கோவா-பெங்களூரு இன்று மோதல்