மத்தியப் பிரதேசத்தில் 16-வது பிரசவத்தின்போது குழந்தையுடன் தாயும் மரணம்

தாமோ,:மத்தியபிரதேச  மாநிலம் தாமோ மாவட்டத்தின் பதாஹிர் கிராமத்தை சேர்ந்தவர் சுக்ரானி (45).  இந்த பெண்ணுக்கு பிறந்த 15 குழந்தைகளில், 4 சிறுவர்களும் 4 சிறுமிகளும்  மட்டுமே  உயிருடன் உள்ளனர். மற்ற 7 குழந்தைகள் பிறந்த சில மணி நேரங்கள், நாட்கள்,  மாதங்களில் இறந்துவிட்டனர். இந்நிலையில், மீண்டும் கர்ப்பமான சுக்ரானி,  தனது 16வது குழந்தையை பெற்றெடுக்க அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில்  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை  பிறந்த சில மணி நேரத்தில் குழந்தை, தாயும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.  ஆனால், குழந்தையும், தாயும் இறந்துவிட்டாதாக அந்த பெண்ணுக்கு பிரசவம்  பார்த்த பெண் ஊழியர் கல்லோ பாய் விஸ்வகர்மா தெரிவித்தார். மேலும் அவர்  கூறுகையில், ‘பிரசவத்தின்போது அந்த ெபண்ணுக்கு ஏற்பட்ட மோசமான உடல்நிலையால்  சோர்வுற்று இருந்தார். அதனால், குழந்தையையும், தாயையும் காப்பாற்ற  முடியவில்லை. அந்தப் பெண் பதினாறாவது முறையாக தாயாகி தற்போது  இறந்துவிட்டார்’ என்றார்.

Related Stories: