×

இந்தியாவின் 8 கடற்கரைகளுக்கு ‘நீலக் கொடி’ அந்தஸ்து!.. தமிழகத்தில் இருந்து ஒன்றுகூட இடம்பெறவில்லை

டெல்லி : இந்தியாவின் 8 கடற்கரைகளுக்கு மதிப்புவாய்ந்த ‘ப்ளூ ஃபிளாக்(நீலக் கொடி) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.நார்வே நாட்டின் தலைநகரம் கோபன்ஹேகனிலுள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான பவுண்டேஷன்தான் இந்த சான்றிதழை வழங்கியுள்ளது.

நீலக் கொடி சான்றிதழைப் பெற்றுள்ள இந்தியாவில் உள்ள கடற்கரைகள் பின்வருமாறு :

    கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் காசர்கோடு
    கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள படுபித்ரி
    குஜராத்தில் சிவராஜ்பூர்
    டையூவில் கோக்லா
    கேரளாவில் கப்பாட்
    ஆந்திராவில் ருஷிகொண்டா
    ஒடிசாவின் பூரியில் கோல்டன் பீச்
    அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் ராதாநகர்

இந்தப் பட்டியலில், தமிழகத்தில் இருந்து ஒன்றுகூட இடம்பெறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

நீலக் கொடி சான்றிதழ் என்றால் என்ன?

நீல கொடி தாங்கும் கடற்கரைகள் உலகின் தூய்மையான கடற்கரைகளாக கருதப்படுகின்றன. இதுவரை, 50 நாடுகளைச் சேர்ந்த 4,664 கடற்கரைகள், மெரினாக்கள் மற்றும் நிலையான படகு சுற்றுலா இயக்குநர்களுக்கு எப்ஈஈ இந்த சான்றிதழை வழங்கியுள்ளது.ஒரு கடற்கரை சான்றிதழ் பெற தகுதி பெறுவதற்காக சுற்றுச்சூழல், குளிக்கும் நீரின் தரம், கல்வி, பாதுகாப்பு, சேவைகள் மற்றும் அணுகல் தரநிலைகள் தொடர்பான 33 கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ட்விட்டரில் பகிர்ந்த ஒரு செய்தியில், “இந்தியாவின் அமைதியான 8 கடற்கரைகள் மதிப்புமிக்க நீல கொடி சான்றிதழைப் பெறுகின்றன.இதுபோன்ற இடங்களைப் பாதுகாப்பதற்கும், நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் இந்தியா கொண்டுள்ள முக்கியத்துவத்தை இது காட்டுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Blue ,beaches ,India ,Tamil Nadu , India, beach, blue flag, status
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...