×

சேறும் சகதியுமான சாலையை பொதுமக்களே சீரமைத்தனர்

ஊட்டி: ஊட்டி புதுமந்து அருகேயுள்ள சாமியார் லைன் பகுதியில் சேறும் சகதியுமாக இருந்த சாலையை பொதுமக்களே சீரமைத்தனர். ஊட்டி அருகே புதுமந்து காவலர் குடியிருப்பு அருகே சாமியார் லைன் பகுதிக்கு செல்ல தனியார் இடத்தில் உள்ள நடைபாதையும், நகராட்சி நடைபாதையும் உள்ளன. கடந்த சில நாட்களாக ஊட்டியில் பெய்த மழை காரணமாக இப்பகுதியில் விவசாய நிலங்களில் இருந்த மண் நடைபாதையில் குவிந்தது.

இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 3 நாட்களுக்கு முன்பு கர்ப்பிணி பெண் ஒருவர் ஆட்டோவில் செல்லும் போது ஆட்டோ சேற்றில் சிக்கி கொண்டது. தொடர்ந்து நடைபாதையில் சேர்ந்துள்ள சகதியை அகற்ற கோரி நகராட்சியிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். மனுவின் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், சாமியார் லைன் மற்றும் ராஜீவ்காந்தி நகர் பகுதி மக்கள் இணைந்து நடைபாதை மற்றும் சாலையில் குவிந்த மண்ணை அகற்றி சீரமைத்தனர்.

Tags : public ,road , Road, Ooty
× RELATED மாட்டு கொட்டகையான சாம்ராஜ் வீதி...