×

கொள்ளிடம் பகுதியில் குறைந்து வரும் வெட்டிவேர் சாகுபடி: அரசு மானியம் வழங்க கோரிக்கை

கொள்ளிடம்: கொள்ளிடம் பகுதியில் வெட்டிவேர் சாகுபடி மிகவும் குறைந்த வருவதால், அரசு நடவடிக்கை எடுத்து மானியம் வழங்க வேண்டும் என விசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். வெட்டிவேர் எல்லா நிலங்களிலும் பயிர் செய்ய முடியாத ஒரு அபூர்வ பயிராகும். திருப்பதி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய சிவன் கோயில்களில் உள்ள திருமேனிகளை அலங்கரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வெட்டிவேர் ஆகும். இந்த பயிர் சாகுபடிக்கு எளிதில் கரையக்கூடிய மண் மட்டுமே உகந்ததாகும். மற்ற விவசாய பயிரை போல் வெட்டிவேர் இல்லை. கொள்ளிடம் பகுதியில் சந்தபடுகை, மாங்கா நாம்பட்டு, தில்லைமங்கலம், எடமணல் உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்டு வந்த இந்த வெட்டிவேர் சாகுபடி இன்றைய நிலையில் மிகுந்த வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால் இன்றைய நிலையில் மற்ற கிராமங்களில் வெட்டிவேர் சாகுபடி நின்று போய்விட்ட நிலையில் தில்லைமங்கலம் கிராமத்தில் மட்டுமே இன்று அபூர்வமாக வெட்டிவேர் சாகுபடி செய்யப்படுகிறது. அதுவும் மிக மிகக் குறுகிய நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. காலப்போக்கில் இதன் சாகுபடி மிகமிகக் குறைந்து போய் விட்டது.

சிரமத்துக்கு இடையே வெட்டிவேரை சாகுபடி செய்து வந்தாலும் அரசு சார்பில் இந்த எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. வெட்டிவேர் பயிர் சாகுபடி வீழ்ச்சிக்கு இதுவும் காரணமாக இருந்தது. பெண்கள் இந்த வெட்டிவேரை தலையில் அணிவதால் வாசனையும்,தலைக்கு குளிர்ச்சியும் உண்டாகும்.மேலும் பித்தம்,சர்க்கரைநோய்,மயக்கம் மற்றும் நரம்பு நோய்களுக்கு சிறந்த மருந்தாக வெட்டிவேர் பயன்படுகிறது. தயிலமாகவும் தயாரித்து பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் வாசனை திரவியங்களும் ஊதுபத்தியும் செய்யப்படுகிறது. வெட்டிவேரை ஒரு தோட்டப்பயிராக அங்கீகாரம் செய்து மற்ற விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவது போல் இதற்கும் வழங்கிஅரசு தரப்பிலிருந்து மானியம் வழங்கினால் நலிவடைந்த இந்த வெட்டிவேர் சாகுபடியை மீண்டும் தொடர்ந்து இப்பகுதியில் செய்ய முன் வருவார்கள் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

Tags : Kollidam Area , Kollidam, Vettiware, Cultivation
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!