×

ஏழை மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தார்: மறைந்த பா.ஜ.க தலைவர் விஜயராஜே நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.!!!

டெல்லி: மறைந்த பா.ஜ.க தலைவர் விஜயராஜே நினைவாக ரூ.100 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். பா.ஜ., கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே. இவர் 1919--ம் ஆண்டு அக்டோபர்  12-ம் தேதி (இன்று) பிறந்த அவர், 2001-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி மறைந்தார். இந்நிலையில், விஜயராஜே, பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவாக, ரூ.100 நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். டெல்லியில்  இருந்தப்படி வீடியோ கான்பரன்சிங்கில் கலந்து கொண்டு பிரதமர் மோடி நாணயத்தை வெளியிட்டார்.

பிறப்பு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், விஜயராஜே குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் பலரும் பல்வேறு பகுதிகளிலிருந்து வீடியோ  கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர். மறைந்த விஜயராஜே, மக்களவை உறுப்பினராக 7 முறையும், மாநிலங்களவை உறுப்பினராக 2 முறையும் பணியாற்றியுள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர் மதவ்ராவ் சிந்தியா மற்றும் ராஜஸ்தான்  முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் தாயார். பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா இவரது பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.


நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ராஜ்மதா சிந்தியா தனது வாழ்க்கையை ஏழை மக்களுக்காக அர்ப்பணித்தார். மக்கள் பிரதிநிதிகளுக்கு ராஜ் சத்தா அல்ல, ஜன சேவா முக்கியமானது என்பதை அவர் நிரூபித்தார் என்றார்.


Tags : Modi ,Vijay Raje. ,BJP , Dedicated life for poor people: PM Modi issues Rs 100 coin in memory of late BJP leader Vijay Raje !!!
× RELATED பா.ஜவுக்கு பெரும்பான்மை இல்லை; மோடி...