அனைத்து பெட்டிகளும் ஏசி மயமாகுதல் அறிவிப்பு ஏழைகளின் உரிமையை பறிக்கும் செயலாகும்! : ராமதாஸ் கருத்து

சென்னை : அனைத்து மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண பெட்டிகளை நீக்கிவிட்டு, முழுமையாக ஏசி பெட்டிகளாக மாற்ற ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய பெட்டிகள் தயாரிக்கும் பணியும், பழைய பெட்டிகளை ஏசி  பெட்டியாக மாற்றும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்..

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மணிக்கு 130 கி.மீக்கும் கூடுதல் வேகத்தில் செல்லும் தொடர்வண்டிகளில் அனைத்துப் பெட்டிகளும் குளிரூட்டி வசதி கொண்டவையாக மாற்றப்படும் என தொடர்வண்டித்துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது தொடர்வண்டிகளில் பயணம் செய்யும் ஏழைகளின் உரிமையை பறிக்கும் செயலாகும்! அனைத்துத் தொடர்வண்டிகளிலும் ஏழைகள் பயணிக்கும் வகையில்  குறைந்தது 50% பெட்டிகள் சாதாரண வகுப்பு பெட்டிகள்  இடம் பெற வேண்டும். அதேபோல் முன்பதிவு இல்லாத பெட்டிகளும் தொடர வேண்டும். தொடர்வண்டித்துறை ஏழைகளின் தோழனாக  தொடர வேண்டும்! என்றார்.

Related Stories:

>