×

சானிடைசர் ,சோப்புகளை அதிகளவில் பயன்படுத்துவதால் நோய் எதிர்ப்பு திறன் பாதிக்கப்படும் அபாயம் :எய்ம்ஸ் மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

டெல்லி : கொரோனா தடுப்புக்கு சானிடைசர் மற்றும் சோப்புகளை அதிகளவில் பயன்படுத்தினால் சுற்றுசூழல் பாதிப்பால் ஏற்படும் நோய்கள் எளிதில் தாக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க சானிடைசர், சோப்புகளை பயன்படுத்துவது தற்போது மக்களிடையே வழக்கமாக மாறியுள்ளது. ஆனால் சானிடைசர் மற்றும் சோப்புகளை அதிகம் பயன்படுத்துவதால் உடலில் நுண்ணுயிர் மண்டலம் அழிக்கப்பட்டு சுற்றுசூழல் பாதிப்பால் ஏற்படும் நோய்கள் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நுண்ணுயிர் தொடர்பான இணைய கருத்தரங்கில் பங்கேற்று பேசிய எய்ம்ஸ் மருத்துவமனையின் நுண்ணுயிர் துறை தலைவர் ராம்சவுத்திரி, மனித உடலில் வாழும் நுண்ணியிரிகள் நோய் எதிர்ப்பு ஆற்றலாக மாறி பல நோய்கள் தாக்காமல் அவை தடுப்பதாக கூறியுள்ளார். சானிடைசர் மற்றும் சோப்பு அதிகம் பயன்படுத்துவதால் நுண்ணுயிரிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு நோய் எளிதில் தாக்கும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர். சுற்றுசூழல் பாதிப்புகள், கால்நடைகள் மற்றும் விலங்குகளிடம் இருந்து நோய் கிருமிகள் மனித உடலுக்குள் புகுந்து நோய் ஏற்படுவதை உடலில் உள்ள நுண்ணுயிர் மண்டலம் தடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : expert ,AIIMS , Sanitizer, soap, immunosuppressant, AIMS, medical expert, warning
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...