×

கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பும் என்னை போன்றவர்களை சிலர் ஒதுக்குகின்றனர்.. காங்கிரஸில் இருந்து விலகுவதாக குஷ்பூ சோனியா காந்திக்கு கடிதம்

சென்னை: காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நடிகை குஷ்பூ நீக்கப்பட்டார். குஷ்பூவின் பதவி பறிக்கப்பட்டதாக காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் பிரணவ் ஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கடந்த சில தினங்களாக டிவிட்டரில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து பதிவிட்டார். அதுபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா  மருத்துவமனையில் இருந்தபோது நலம் பெற வாழ்த்து தெரிவித்தார். அதிமுக முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக கூறப்பட்டு வந்தது. டெல்லியில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று குஷ்பு பாஜவில் இணையப்போவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்,டெல்லி காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நடிகை குஷ்பூ நீக்கப்பட்டார். குஷ்பூவின் பதவி பறிக்கப்பட்டதாக காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் பிரணவ் ஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  பாஜகவில் இணைய டெல்லி சென்ற நிலையில், நடிகை குஷ்பூ மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தாம் விலகி கொள்வதாக சோனியா காந்திக்கு குஷ்பூ கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பும் என்னை போன்றவர்களை சிலர் ஒதுக்குவதாகவும், மூத்த தலைவர்கள் புறக்கணிக்கின்றனர் என்றும் கட்சியின் உயர் பதவியில் இருப்பவர்கள், கள நிலவரம் அறியாதவர்கள் தன்னை அடக்கி வைத்தனர் என்றும் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், நீண்ட யோசனைக்கு பிறகே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்தேன்.பணம், புகழை பெறுவதற்காக நான் காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை.உங்கள் மீதான மதிப்பு எப்போதும் அப்படியே இருக்கும், என்று சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் நடிகை குஷ்பு இன்று பாஜகவில் இணைவது உறுதியாகியுள்ளது.

Tags : Khushboo ,Sonia Gandhi ,Congress , Congress, Khushboo, Sonia Gandhi, Letter
× RELATED இந்தியாவின் ஜனநாயகத்தின்...