×

இந்தியா எல்லையில் தொடரும் பதற்றம்... 35 நாள்களில் 10 ஏவுகணைகள் பரிசோதனை!

புதுடெல்லி, :-இந்திய - சீன எல்லைப் பிரச்னைகளுக்கு மத்தியில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (டிஆர்டிஓ) அடுத்த வாரம் ‘நிர்பே’ சூப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தால், கடற்படை மற்றும் ராணுவ பயன்பாட்டிற்கு பெரும் பங்களிப்பை அளிக்கும். இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இலக்கை தாக்கும். 24 வெவ்வேறு போர்க்கப்பல்கள் வழியாக 800 கி.மீ. தூரம் வரை இருக்கும் இலக்கை தாக்க முடியும். சிறிய செயற்கைக்கோள் வெளியீட்டு வாகனம் (எஸ்.எஸ்.எல்.வி) என்ற புதிய ராக்கெட்டை ஏவ இஸ்ரோ தயாராகி வருகிறது.

இது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும். பி.எஸ்.எல்.வி சி -49 கேரியரின் லான்ச் பேட், எஸ்எஸ்எல்விக்கு ஏற்றவாறு மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, டிஆர்டிஓ தொழில்நுட்ப பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. ‘மேட் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், ஒவ்வொரு 4 நாட்களுக்கு ஒருமுறை ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது.  கடந்த 35 நாட்களில் 10 ஏவுகணை சோதனைகளை டிஆர்டிஓ நடத்தி உள்ளதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை நடந்திருக்கும் பரிசோதனைகளில் பிரமோஸ் (BrahMos) ஏவுகணை, சவுரியா சூப்பர்சோனிக் ஏவுகணை, நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை, பிரித்வி-2 போன்ற ஏவுகணைகள் முக்கியமானவை. இந்த ஏவுகணைகளைப் படைகளில் சேர்க்க மத்திய அரசும் அனுமதி வழங்கியிருக்கிறது

Tags : border ,India , India, border, tension., Missiles, test
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது