×

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

அபுதாபி: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் ரிஷப் பன்ட் (காயம்), ஹெட்மயருக்கு பதிலாக அலெக்ஸ் கேரி, ரகானே இடம் பெற்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்றமில்லை.

தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, தவான் களமிறங்கினர். போல்ட் வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் பிரித்வி ஷா (4 ரன்),  அடுத்து வந்த ரகானே 15 ரன்னில் அவுட் ஆனார்கள். டெல்லி அணி 24 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், தவான் - கேப்டன் ஷ்ரேயாஸ் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்தனர். ஷ்ரேயாஸ் 42 ரன் (33 பந்து, 5 பவுண்டரி) விளாசி குருணல் சுழலில் போல்ட் வசம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் உறுதியுடன் விளையாடிய தவான் 39 பந்தில் அரை சதம் அடித்தார். ஸ்டாய்னிஸ் 13 ரன் எடுத்து ரன் அவுட்டானார்.

டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தது. தவான் 69 ரன் (52 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), அலெக்ஸ் கேரி 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து 20 ஓவரில் 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. இதில் ரோகித் சர்மா 5 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து டிகாக்,  சூரியகுமார் ஜோடி அபாரமாக ஆடியது. இவர்கள் தலா 53 ரன்கள் எடுத்தனர். இறுதியில் பெல்லார்டு 11, குருனால் பாண்டியா 12 ரன்கள் எடுத்தனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 19.4 ஓவரில் 166 ரன் எடுத்து,  5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags : Mumbai Indians , Mumbai Indians win
× RELATED ஐபிஎல் தொடரில் அதிக முறை ‘டக் அவுட்’...