×

காஞ்சிபுரத்தில் கோ-ஆப் டெக்ஸின் தீபாவளி சிறப்பு விற்பனை: கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார். வாடிக்கையாளர்களின் மாறிவரும் ரசனை மற்றும் தேவைகளை அறிந்து கைத்தறி ரகங்களை உருவாக்க நிறுவனம் புத்தம் புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்து 2019-2020ம் ஆண்டில் சுமார் 300 கோடி அளவிற்கு சில்லரை விற்பனை  செய்யப்பட்டு அதன் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பும் அளித்து வருகிறது. இவ்வாண்டு புதிய ரக வரவுகளாக சில்க் லெனான் சேலைகள், டிசைனர் காட்டன் சேலைகள், டிசைனர் போர்வைகள், போர்வைகள், பாலி விஸ்கோஸ் சூட்டிங் ஆகியன விற்பனைக்கு உள்ளன.

தற்போது தீபாவளி 2020 பண்டிகை விற்பனை லக்காக ரூ.11 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் காமாட்சி கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலைய கடந்த ஆண்டு ரூ.1.14 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு ரூ.1.30 கோடி  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய பெருநாட்டின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி 2020 சிறப்பு விற்பனை அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் கோலாகலமாக துவங்குகிறது. தூய பட்டு மற்றும்  அசல் ஜரிகைகளால் தயாரிக்கப்பட்ட திருமண பட்டுப்புடவைகள் ரூ.5000 முதல் ரூ.40000 வரையில் பல வண்ணங்களில் சங்க விலைக்கே வழங்கப்படுகிறது.

கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் தற்போது ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும்.  பொதுமக்கள் அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளா்களுக்கு உதவ வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் வேலூர் கோ-ஆப் டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் சண்முகம், காஞ்சிபுரம் கோ-ஆப் டெக்ஸ் மேலாளர் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) காங்கேய வேலு, காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் தணிகைவேல்  மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



Tags : Deepavali Special Sale of Co-op Tex ,Kanchipuram ,Collector , Deepavali Special Sale of Co-op Tex in Kanchipuram: Collector started
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...