×

புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணித்தால் ரூ.200 அபராதம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

சென்னை: புறநகர் சிறப்பு மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்தால் ரூ.200 அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வந்ததையடுத்து கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பொது போக்குவரத்துகளான பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது.  தற்போது, அக்டோபர் 31ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களுக்காக செப்டம்பர் 5ம் தேதி முதல் சென்னை கடற்கரை- செங்கல்பட்டுக்கும், மூர்மார்க்கெட்  முதல் கும்மிடிப்பூண்டி, அரக்கோணத்துக்கும் தினமும் 42க்கும் மேற்பட்ட புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு ரயில்களில் அரசு அங்கீகரித்துள்ள ஊழியர்கள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். ஆனால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களும் அனுமதியின்றி பயணம் செய்வதால்  ரயில்களில் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது என புகார்கள் வந்தது. இதனை தடுக்கும் வகையில் புறநகர் மின்சார ரயில்களில் டிக்ெகட் பரிசோதகர்கள் பயணிகளின் அடையாள அட்டைகளை வாங்கி சோதனை செய்ய ஆரம்பித்தனர். ஆனாலும் பொதுமக்கள் பயணம் செய்வதை தடுக்க முடியவில்லை.  இதையடுத்து ரயில்களில் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் புதிய நடவடிக்கையாக உரிய அனுமதி அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு ₹200 முதல் ₹300 வரை அபராதம் விதிக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது.

எனவே அத்தியாவசிய பணியாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பொதுமக்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாம் எனவும், மீறி பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதற்கான  அறிவிப்பு தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : commuters ,Southern Railway , Rs 200 fine for commuters traveling on suburban electric trains: Southern Railway warning
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...