×

கொலிஜியம் பரிந்துரை இல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் 4 நீதிபதி காலியிடம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் 4 நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தில் 3 தலைமை நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது. இவற்றை நிரப்ப கொலிஜியத்தின் பரிந்துரைக்காக அரசு காத்திருக்கிறது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் கடந்த ஆண்டு நவம்பரில் ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து, மூத்த நீதிபதிகள் தீபக் குப்தா, பானுமதி மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் ஓய்வு பெற்றனர். இதனால்,  நிர்ணயிக்கப்பட்ட 34 நீதிபதிகளுக்கு பதிலாக 30 நீதிபதிகளுடன் உச்ச நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

இதே போல், கவுகாத்தி, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. நிர்வாக தேவைக்காக அங்கு தற்காலிக தலைமை நீதிபதிகள் பொறுப்பு வகிக்கின்றனர். நீதிபதிகள்  நியமனத்தை பொறுத்த வரையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம், நீதிபதிகளை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்யும். கடந்த ஓராண்டாக இந்த காலி பணியிடங்கள் இருக்கும்  நிலையில், இதுவரை கொலிஜியம் எந்த பரிந்துரையையும் அரசுக்கு வழங்கவில்லை. எனவே, நீதிபதிகள் பணியிடத்தை நிரப்புவதில் கொலிஜியத்தின் பரிந்துரையை எதிர்பார்த்து இருப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.



Tags : judges ,Supreme Court ,Collegium , Vacancy of 4 judges in the Supreme Court without the recommendation of the Collegium
× RELATED தேர்தலில் வாக்களிப்பதை குடிமக்களின்...