×

போராட்டத்தில் தள்ளுமுள்ளு: சீக்கியர் டர்பனை கழற்றிய போலீஸ்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் இரு தினங்களுக்கு முன் பாஜ சார்பில் முதல்வர் அலுவலகம் நோக்கி பேரணி நடந்தது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும்,  போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பல்விந்தர் சிங் (43) என்ற சீக்கியரின் தலைப்பாகையை போலீசார் பிடித்து இழுத்து தள்ளி விட்டு, அவரை கைது செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில்  இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.
தலைப்பாகை தட்டி விடப்பட்டதற்கு சிரோன்மணி அகாலி தளம் கட்சி, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்த போலீசார், சில சிசிடிவி பதிவுகளை வெளியிட்டனர். அதில்,  தள்ளுமுள்ளுவின் போது பல்விந்தர் சிங்கின் தலைப்பாகை ஏதேச்சையாக கீழே விழுவது போல் உள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநில உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘சீக்கியர்களின் நம்பிக்கைகளை மேற்கு வங்க அரசு மதிக்கிறது. இங்கு சீக்கியர்கள் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து  வருகின்றனர். மக்களை பிரிக்கும் நோக்கத்துடன் குறிப்பிட்ட ஒரு கட்சி, இந்த சம்பவத்துக்கு மத சாயம் பூச முயற்சிக்கிறது ,’ என கூறி உள்ளது. இந்த சம்பவத்தால் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் -  பாஜ இடையிலான மோதல் மேலும்  அதிகரித்துள்ளது.

Tags : fight ,Sikh , Pushing into the fight: Police removing Sikh turban
× RELATED ராமர் பெயரில் ஓட்டு கேட்பதாக பிரதமர்...