×

ஊழியர்களுக்கு கொரோனா பத்மநாபசுவாமி கோயிலில் ஐப்பசி விழா ஒத்திவைப்பு

திருவனந்தபுரம்:  கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலின் பெரியநம்பி, பூசாரி உட்பட 12  ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 9ம்தேதி முதல் வரும் 15ம் தேதி வரை  பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோயிலின் தினசரி பூஜைகளை கவனித்துக் கொள்ள, தந்திரி சரணநெல்லூர் சதீசன் நம்பூதிரிபாடு தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும், வரும் 15ம் தேதி  முதல் நடக்க இருந்த ஐப்பசி திருவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, பங்குனி திருவிழாவும் கொரோனாவால் மாற்றி வைக்கப்பட்டது.  பின்னர், அது கடந்த மாதம் எளிமையாக நடத்தப்பட்டது.

Tags : ceremony ,Corona Padmanabhaswamy Temple , Postponement of Ipasi ceremony at Corona Padmanabhaswamy Temple for staff
× RELATED நாளை நடைபெறவிருந்த NET தேர்வு ஒத்திவைப்பு