×

19 வயது சாம்பியன்

பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில், 19 வயது இளம் வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து, 54வது ரேங்க்) 6-4, 6-1 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் சோபியா கெனினை (21 வயது, 6வது ரேங்க்) வீழ்த்தி முதல்  முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். இந்த சாதனையை படைக்கும் முதல் போலந்து வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார் ஸ்வியாடெக்.

குவாரன்டைன் கட்டாயம்

மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் பங்கேற்க உள்ள வீராங்கனைகளில் சுமார் 30 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் அக். 13ம் தேதி மும்பை வர உள்ளனர். ஒரு வார தனிமைப்படுத்தல் மற்றும் பல முறை கோவிட்-19  பரிசோதனைகளுக்குப் பிறகு, கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் அக். 22ல் யுஏஇ புறப்பட உள்ளனர்.

* டிரெய்ல்பிளேசர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள நத்தகன் சாந்தம், இந்த தொடரில் விளையாடும் முதல் தாய்லாந்து வீராங்கனை என்ற பெருமையை பெறுகிறார்.
* ஒவ்வொரு அணியில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீராங்கனைகள் களமிறங்கலாம்.
* யுஏஇ செல்லும் அனைத்து வீராங்கனைகள், நிர்வாகிகள், ஊழியர்களுக்கும் 6 நாள் குவாரன்டைன் மற்றும் கொரோனா சோதனை கட்டாயம்.
* இந்த தொடருக்கான களம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அனைத்து போட்டிகளும் ஷார்ஜாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Tags : 19-year-old champion
× RELATED ஐபிஎல் டி20 கிரிக்கெட்; பெங்களூரு – கொல்கத்தா இன்று மோதல்