×

மகளிர் டி20 சேலஞ்ச் அணிகள் அறிவிப்பு

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள மகளிர் டி20 சேலஞ்ச் தொடருக்கான அணிகள் மற்றும் அட்டவணை விவரத்தை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடருடன் சேர்ந்து நடைபெற உள்ள இந்த தொடரில் சூப்பர்நோவாஸ், டிரெய்ல்பிளேசர்ஸ், வெலாசிட்டி என மூன்று அணிகள் களமிறங்க உள்ளன. இந்த அணிகளின் கேப்டன்களாக முறையே ஹர்மான்பிரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா,  மித்தாலி ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். போட்டிகள் அடுத்த மாதம் 4ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெறும். ஒவ்வொரு அணியும் மற்ற 2 அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 9ம்  தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் மோதும்.

சூப்பர்நோவாஸ்: ஹர்மான்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிகியூஸ் (துணை கேப்டன்), சமாரி அட்டப்பட்டு, பிரியா பூனியா, அனுஜா பட்டீல், ராதா யாதவ், டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஷஷிகலா வர்தனே, பூணம் யாதவ், ஷகிரா  செல்மான், அருந்ததி ரெட்டி, பூஜா வத்ஸ்ராகர், ஆயுஷி சோனி, அயபோங்கா காகா, முஸ்கான் மாலிக். டிரெய்ல்பிளேசர்ஸ்: ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), தீப்தி ஷர்மா (துணை கேப்டன்), பூணம் ராவுத், ரிச்சா கோஷ், டி.ஹேமலதா, நுஷாத் பர்வீன் (விக்கெட் கீப்பர்), ராஜேஷ்வரி கெயிக்வாட், ஹர்லீன் தியோல், ஜுலன் கோஸ்வாமி, சிமரன் தில்  பகதூர், சல்மா கதுன், சோபி எக்லஸ்டோன், நத்தகன் சாந்தம், தியாந்த்ரா டோட்டின், கஷ்வீ கவுதம்.

வெலாசிட்டி: மித்தாலி ராஜ் (கேப்டன்), வேதா கிருஷ்ணமூர்த்தி (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), ஏக்தா பிஷ்ட், மான்சி ஜோஷி, ஷிகா பாண்டே, தேவிகா வைத்யா, சுஷ்ரீ திவ்யதர்ஷினி, மணாலி தக்‌ஷிணி,  லெய் கேஸ்பரெக், டேனியலி வியாட், சுனே லுவஸ், ஜகானாரா ஆலம், எம்.அனகா.

Tags : Announcement ,Women's T20 Challenge Teams , Announcement of Women's T20 Challenge Teams
× RELATED பிளாக்பஸ்டர் பார்டர்-கவாஸ்கர் டிராபி:...