பண்பாட்டை சீரழிக்கும் திரைப்படங்களுக்கு தடை: கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த பேட்டி: ஆபாச படத்திற்கு  முற்றுப்புள்ளி வைக்குமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்சார் போர்டு மத்திய அரசு  கட்டுப்பாட்டில் உள்ளதால் ஆபாச காட்சிகளை நீக்குமாறு தமிழக அரசு வலியுறுத்தும். பொதுவாக திரைப்படங்கள் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறும் சாதனங்களாக இருக்க வேண்டும். தமிழக அரசை பொறுத்தவரை தமிழர்களின் கலை, பண்பாட்டை சீரழிக்கும் வகையில் எந்தப் படம் வந்தாலும், அது யாருடைய படமாக  இருந்தாலும் அதை சென்சார் போர்டு மூலமாக தடை விதிக்க தமிழக அரசு ஆவன செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>