திருப்போரூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா

சென்னை: திருப்போரூர் தொகுதி முன்னாள் அதிமுக  எம்எல்ஏவும், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராகவும் பொறுப்பு வகித்த தனபால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும், புதுப்பட்டினம் ஊராட்சி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைப்பு சாரா தொழிலாளர்களான, ஆட்டோ ஓட்டுநர், முடிதிருத்துவோர், சலவைத் தொழிலாளர் எனவாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு  அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கி வந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தனபால் சென்னை  மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>