எழும்பூர்- மதுரை தேஜஸ் ரயில் நேரம் மாற்றம்

சென்னை:  தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூர்- மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரயில் (02613) வியாழக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் காலை 6 மணிக்கு இயக்கப்பட்டு வந்த நிலையில்  நாளை முதல் காலை 6.30 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த தேஜஸ் சிறப்பு ரயில் திருச்சி ரயில் நிலையத்துக்கு 10.30 மணிக்கு சென்றடையும். பின்னர் அங்கிருந்து 10.35 மணிக்கு புறப்பட்டு,  கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திற்கு காலை 11.53க்கும் சென்றடையும். பின்னர் அங்கிருந்து 11.55 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு பிற்பகல் 12.50 மணிக்கு சென்றடையும். அதைப் போன்று மறுமார்க்கமாக மதுரையில் இருந்து  சென்னைக்கு இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரயிலில் எந்த மாற்றமும் இல்லாமல் வழக்கம் போல் இயக்கப்படும்.

Related Stories:

>