வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் திருமணம், பிறப்பு குறித்த மெய்தன்மை சான்றுகளை உடனுக்குடன் வழங்க வேண்டும்: ஐஜி அலுவலகம் சார்பதிவாளர்களுக்கு உத்தரவு

சென்னை: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் திருமணம், பிறப்பு சான்றுகளை சரிபார்த்து  மெய்த்தன்மை சான்றை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று ஐஜி அலுவலகம் சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பதிவுத்துறை தலைவர் அலுவலகம் அனைத்து மண்டல டிஐஜிக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  இந்திய குடிமக்கள் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்களது திருமணம் மற்றும் பிறப்பு சான்றிதழ்களை சரிபார்க்க இந்திய வெளியுறவு அமைச்சகத்தினால் தேசிய தகவல் மையம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஈசனத் தளத்தின் மூலம்  இணையவழி விண்ணப்பித்து சான்றொப்பம் பெற்றிடலாம்.

இத்தளத்தில் பதிவுத்துறையும் இணைந்து பங்களிப்பினை ஆன்லைன் மூலம் அளித்திட ஏதுவாக ஈசனத் (e sanad portal) தளத்தில் இணைவதற்கு தமிழக அரசின் அனுமதி கிடைக்க  பெற்று இணைய முகப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி, வேலைவாய்ப்பு, சார்பு விசா மற்றும் வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்களால் வழங்கப்பட்ட  திருமணம் மற்றும் பிறப்பு சான்றுகளை சரிபார்ப்பதற்கு ஈசனத் சேவையினை காகித உபயோகமற்ற பணப்பரிவர்த்தனையற்ற முறையில் விரைவாக பயன்பெறலாம். பொதுமக்களது சான்றிதழ்களில் சான்றொப்பத்தினை மின் ஒப்பம் (Digitalized  signature) மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இச்சேவை கடந்த செப்டம்பர் 12ம் தேதி முதல் பதிவுத்துறையில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. காகித உபயோகம், கால விரயம், பணப்பரிவர்த்தனை ஆகியவற்றினை தவிர்த்து விரைவாக பொதுமக்களின் சான்றிதழ்களில் சான்றொப்பத்தினை  பெறுவது இச்சேவையின் நோக்கமாகும். பதிவுத்துறை அலுவலகத்தில் ஈசனத் மூலம் விண்ணப்பத்துடன் பெறப்படும் சான்றுகள் பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தின் மின்னஞ்சல் மூலம் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்திய குடிமக்கள்  இச்சேவையினை பயன்படுத்தி கால விரயம் தவிர்த்து இச்சேவையினை எளிதாக பெற்று பயனடைய மின்னஞ்சல் மூலம் பெறப்படும் சான்று தங்களது இச்சேவையினை எளிதாக பெற்று பயனடைய மின்னஞ்சல் மூலம் பெறப்படும் சான்று  தங்களது அலுவலகத்தினால் வழங்கப்பட்டுள்ளது என்பதனை உறுதி செய்ய தங்களது அலுவலகத்தில் உள்ள பதிவேடுகள் மற்றும் சான்றுகளுடன் ஒப்பிட்டு சரிபார்த்து சரிபார்ப்பு மெய்த்தன்மை சான்றினை எவ்வித காலதாமதமின்றி  உடனுக்குடன் அன்றைய தேதியிலேயே மறு மின்னஞ்சலில் அளித்திட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>