×

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு மீண்டும் சூடுபிடித்தது அரசு அதிகாரிகள், தரகர்கள் உட்பட 6 பேர் கைது: சிபிசிஐடி போலீஸ் நடவடிக்கை

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள் உட்பட மேலும் 6 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் படி முறைகேட்டில் தொடர்புடைய நபர்களை தேடி  வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்தாண்டு நடந்த குரூப் 4 மற்றும் கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடாக பலர் பணம் கொடுத்து வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, டிஎன்பிஎஸ்சி கொடுத்த புகாரின்படி  சிபிசிஐடி போலீசார் இரண்டு வழக்குகளையும் ஏற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த 2 வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான காவலர் சித்தாண்டி, டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம்காந்தன் உட்பட 32 பேரை கடந்த  பிப்ரவரி 6ம் தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். வழக்கில் கைது செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம்காந்தனிடம் நடத்திய விசாரணையில், பால்டெக்னிக் தேர்வு முறைகேடு, குரூப் 2ஏ, குரூப் 4, பொறியாளர் பணி தேர்வுகள் என மொத்தம் கடந்த 8 ஆண்டுகளில் சித்தாண்டி,  ஓம்காந்தன், ஜெயகுமார் கூட்டணி மெகா மோசடியாக 1,000 பேரிடம் பல கோடி ரூபாய் வசூலித்து தேர்வில் வெற்றி பெற வைத்தது விசாரணையில் தெரியவந்தது.

 அவர்கள் அனைவரும் தற்போது 41 அரசு துறைகளில் பல்வேறு பணியிடங்களில் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஜெயகுமார் கடந்த பிப்ரவரி மாதம் சைதாப்பேட்டை  நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், 6 மாதங்களுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டதாக உள்துறை அதிகாரி உட்பட 20 பேரை சிபிசிஐடி போலீசார் கடந்த 10 நாட்களில் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்தி விசாரணையை  தொடர்ந்து முறைகேட்டில் தொடர்புடைய 3 விஏஓக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட மேலும் 6 பேரை சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் விசாரணைக்கு பிறகு 6 பேரையும் சிபிசிஐடி  போலீசார் ஜாமீனில் விடுவித்ததாக கூறப்படுகிறது. 6 பேரையும்  எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் நேரில் வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் நேற்று முன்தினம் வரை 51 பேர் கைது ெசய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடி வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளதால் அரசு அதிகாரிகள் முதல் முறைகேட்டில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் மற்றும்  இடைத்தரகர்கள் வரை கலக்கத்தில் உள்ளனர்.

Tags : DNPSC ,government officials ,police action ,CBCID ,brokers , 6 arrested, including government officials, brokers: CBCID police action
× RELATED தேனியில் 2500 அரசு அலுவலர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி