காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ நாளை பிற்பகல் 1 மணிக்கு ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜக இணையுள்ளதாக தகவல்

டெல்லி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ நாளை பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரபல நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராகவும் இருக்கும் குஷ்பு, பாஜகவில் இணைய போவதாக கடந்த சில வாரங்களாகவே பரபரப்பு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.  எனினும், குஷ்பூ இந்த தகவலை மறுத்து வருகிறார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்தபோது அந்த நிகழ்ச்சியில் குஷ்பூ கலந்து கொண்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வடசென்னையில் நடந்த காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டார். இந்த நிலையில், குஷ்பூ இன்று டெல்லி சென்றுள்ளதாகவும் நாளை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீப காலமாகவே குஷ்பூ காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Related Stories:

>