ராணுவ வீரர்களுக்கு அதிக குளிர் தாங்கும் ஆடைகள் உற்பத்தியில் இந்தியா சுயசார்பை எட்ட வேண்டும்: ராணுவ தளபதி

டெல்லி: அதிக குளிர் தாங்கும் ஆடைகள் உற்பத்தியில் இந்தியா சுயசார்பை எட்ட வேண்டும் என துணை ராணுவ தளபதி கேட்டுக் கொண்டுள்ளார். கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு மைனஸ் 50 டிகிரி வரையிலான அதிக குளிரை தாங்கக் கூடிய சிறப்பு ஆடைகளின் உற்பத்தியில் இந்தியா சுயசார்பை எட்ட வேண்டும் என்று துணை ராணுவ தளபதி எஸ்.கே.சைனி கேட்டுக் கொண்டுள்ளார். போர்கலன்கள் தொடர்பான வெப் கருத்தரங்கில் பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது மலையேறுவதற்கான உபகரணங்களின் உற்பத்தியிலும் சுயசார்பு எட்டப்பட வேண்டும். இவற்றின் உள்நாட்டு உற்பத்தி மூலம் நாம் இறக்குமதியை நம்பியிருப்பதை குறைக்க வேண்டும்.

அதே போல் முக்கிய ராணுவ தளவாடங்களை நிறுவுதல் அதிசக்தி வெடி மருந்துகள் டிரோன்கள் போன்றவற்றிலும் உள்நாட்டு பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். ராணுவ தளவாடங்களை கையாளுவதில் மனிதர்களின் நேரடி பங்களிப்பை தவிர்த்து தானியங்கி முறைகளை தானியங்கி முறைகளை அமல்படுத்த வேண்டும் இவ்வாறு துணை ராணுவ தளபதி தெரிவித்தார்.

Related Stories:

>