×

முகக்கவசத்தை அணிய வேண்டுமா? கட்டுப்பாடுகளுடனே இருக்க வேண்டுமா?: தொற்று குறித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பேட்டி..!!

மும்பை: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. மேலும், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் தொற்று கட்டுக்குள் வர மறுக்கிறது. இந்த நிலையில், பொதுமக்களுடன் இணைய வாயிலாக பேசிய  மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது: மகாராஷ்டிராவில் 70 முதல் 80 சதவிகிதத்தினருக்கு கொரோனா அறிகுறியில்லாமல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அவர் கூறியதாவது: கொரோனா தொற்றுக்கு எதிரான பேரில் மருந்துகள் கண்டறியும் வரை முகக்கவசம் மட்டுமே தற்காப்புக் கவசமாக பயன்படுத்த வேண்டும்.  பெருந்தொற்றுக்கு எதிரான போரில்  வெற்றி கொள்ள மக்களின் அர்ப்பணிப்பும், ஈடுபாடும் அவசியம் என தெரிவித்தார்.

இதனையடுத்து, முகக்கவசத்தை அணிய வேண்டுமா, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமா அல்லது கட்டுப்பாடுகளுடனே இருக்க வேண்டுமா? என்பதை  மக்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.  தற்போது துவங்கப்பட்டுள்ள எதுவும் மீண்டும் மூடப்படாது. அதிக அளவு மக்கள் பயணிப்பர் என்பதால் புறநகர் ரயில் சேவை துவங்க அரசு விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.


Tags : Uttam Thackeray ,Maharashtra ,interview , Corona, Chief Minister of Maharashtra, Interview
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...