×

மகாராஷ்டிராவில் தீபாவளி பண்டிகைக்கு முன் பள்ளி கூடங்கள் திறக்கப்படாது: அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்..!!

புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன் பள்ளி கூடங்கள் திறக்கப்படாது என்று அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகம் கொண்ட மாநிலம் ஆக மகாராஷ்டிரா உள்ளது.  மகாராஷ்டிராவில் இதுவரை 15.17 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் மிக அதிக அளவாக மராட்டியத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நாட்டில் வருகிற 15ம் தேதி முதல் பள்ளி கூடங்களை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மராட்டிய பள்ளி கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்: தீபாவளி பண்டிகைக்கு முன் பள்ளி கூடங்கள் நிச்சயம் திறக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

Tags : School halls ,Diwali: State School ,Maharashtra ,Education Minister , Maharashtra, Schools, Minister, Information
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...