வார விடுமுறை நாளிலும் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்

ஊட்டி: 6 மாதங்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்ட போதிலும், தாவரவியல் பூங்கா வார விடுமுறை நாட்களில் வழக்கம்போல் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. வார விடுமுறை நாளான நேற்றும் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு குறைந்தளவே சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பூங்காவில் உள்ள புல் மைதானத்தில் ஆங்காங்கே ஓரிரு சுற்றுலா பயணிகள் மட்டுமே காணப்பட்டனர். மாடங்களில் வைக்கப்பட்டுள்ள மலர்களையும் காண சுற்றுலா பயணிகள் இன்றி பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.

இதே போன்று ஊட்டி ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்காவிலும் குறைந்தளவே சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர். சுற்றுலா பயணிகள் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள். முதல் சீசனில் விட்டதை இரண்டாம் சீசனில் பிடிக்கவில்லையென்றாலும், வாங்கியதை விற்று தீர்க்கலாம் என நினைத்த ஊட்டி வியாபாரிகளுக்கு இது பெரும் ஏமாற்றமாகவே உள்ளது.

Related Stories:

>